83 அடியை எட்டியது அமராவதி அணை : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பதிவு : நவம்பர் 17, 2018, 07:53 AM
கஜா புயல் காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
கஜா புயல் காரணமாக, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், அமராவதி அணைக்கு வரும் நீர் வரத்தானது,  வினாடிக்கு 13 ஆயிரத்து 382 கன அடியாக உள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம்  83 அடியை எட்டியுள்ளது.
அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும், உபரிநீர் திறக்கப்படும் என்பதால், அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள
பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.