திடீரென்று தீப்பற்றி எரிந்த இரு சக்கர வாகனம்...

சேலம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு அருகே, நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனத்தை எடுக்கும் போது திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென்று தீப்பற்றி எரிந்த இரு சக்கர வாகனம்...
x
ஆத்தூர் அம்மம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான வாகனம் , திடீரென்று தீப்பிடித்துள்ளது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இரு சக்கர வாகனம் தீப்பற்றி எரியும் போது, பெட்ரோல் வெடித்து விடுமோ என நோயாளிகள் அச்சத்தில் ஆழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இரு சக்கர வாகனம் எரிந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


Next Story

மேலும் செய்திகள்