அணைகளை தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
பதிவு : நவம்பர் 16, 2018, 05:20 PM
தமிழகத்தில் உள்ள 11 அணைகளை தூர்வாருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது.
* மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ஆழியாறு, அமராவதி, பவானிசாகர், கல்லணை, கொடிவேரி உள்ளிட்ட அணைகளை உடனே தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இதேபோல் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை தூர்வார உத்தரவிடக் கோரி மற்றொரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

* இந்த மனுக்கள் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அணைகளைத் தூர்வாருவதற்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அணைகளைத் தூர்வார என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை தலைமை செயற்பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.