பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு

மதுரையில் விளாங்குடியில், பிறந்த நாள் கொண்டாடிய போது கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளையும் நிபந்தனையுடன் போலீசார் விடுவித்துள்ளனர்.
பிறந்த நாள் கொண்டாடிய ரவுடிகள் : கைது செய்யப்பட்ட 20 ரவுடிகளும் விடுவிப்பு
x
* மதுரை பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்ற 14 - க்கும் மேற்பட்ட கொலைகள் தொடர்பாக குற்றவாளிகளை போலீஸார் தேடி வந்தனர்.

* இந்நிலையில் விளாங்குடியில் இருந்து சமயநல்லூர் செல்லும் வழியில் உள்ள தனியார் மதுபான விடுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பிரமுகர் சோலை ரவியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீஸார் சுற்றி வளைத்தனர்.  

* பலர் தப்பியோடிய நிலையில், 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தொடர் கொலைகளுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது.  

* இதனையடுத்து குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று எழுத்துபூர்வமாக அவர்கள் உறுதியளித்த பின்னர் விடுவிக்கப்பட்டனர். மீறினால் குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களை போலீஸார் எச்சரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்