நகை அடகு கடையில் பணம் பறித்தவர் கைது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டியில் நகை அடகு கடையில் நூதன முறையில் போலி நகையை அடமானம் வைத்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நகை அடகு கடையில் பணம் பறித்தவர் கைது
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டியில் நகை அடகு கடையில் நூதன முறையில் போலி நகையை அடமானம் வைத்த ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த 4 ஆம் தேதி சக்தி என்பவர் நகை அடகு கடையில் இரண்டு பேர் 16 கிராம் நகையை கொடுத்து 33 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளனர். இதில் நகை பரிசோதித்த அடகு கடை உரிமையாளர் கவரிங் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளார். இதில் போலீசார் விசாரணையில்  சீரஞ்சிவி என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 33 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து தலைமறைவான ரமேஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்