இந்தோனேஷிய பெண்ணை மணந்த தமிழக இளைஞர்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இந்தோனேஷியா நாட்டுப் பெண்ணுக்கும் தமிழக இளைஞருக்கும் தமிழ் கலாசார பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தேறியது.
இந்தோனேஷிய பெண்ணை மணந்த தமிழக இளைஞர்
x
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முனியாண்டி. இவரது மகன் கார்த்திகேயன், டிப்ளமோ முடித்து விட்டு சிங்கப்பூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடன் பணியாற்றிய இந்தோனேஷியாவை சேர்ந்த பெர்லிஸ் என்பவர், கார்த்திகேயனை, கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் காதலர்கள், இருவரும், பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பள்ளத்தூரில் உள்ள மணமகன் வீட்டில் உறவினர்கள் ஆசி வழங்க,மாங்கல்யம் அணிவித்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து மாலை மாற்றி திருமணம் விமரிசையாக, நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்