பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை அரிவாளால் தாக்கிய ஓட்டுனர்

கன்னியாகுமரி அருகே, ஓட்டுனர் ஒருவர் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மாணவிகளை அரிவாளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்குள் புகுந்து மாணவிகளை அரிவாளால் தாக்கிய ஓட்டுனர்
x
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த சிதறால் பகுதியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுனர் ஜெயன், அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றிற்குள், குடி போதையில் கையில் அரிவாளுடன் சென்றுள்ளார். நேராக மாணவிகள் விடுதிக்கு சென்ற அவர், அங்கிருந்த மாணவிகளிடம், பள்ளி தாளாளர் ராஜேஷின் மனைவி எங்கே? என்று கேட்டுள்ளார். மாணவிகள் தெரியாது என்று கூற, ஜெயன், அவர்களை அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த வாஷிங் மெஷின், டிவி, ஜன்னல் உள்ளிட்டவற்றையும் ஜெயன் உடைத்து தள்ளியுள்ளார். இதையடுத்து, அங்கு திரண்ட பொதுமக்கள் ஜெயனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்