நாளை மாலை கரையை கடக்கிறது, 'கஜா புயல்'

கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
நாளை மாலை கரையை கடக்கிறது, கஜா புயல்
x
வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து 540 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து 640 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 6 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்து வரும் 'கஜா' புயல், நாளை மாலை கடலூர், பாம்பன் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக, தமிழ்நாட்டின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று மாலையில் இருந்து மழை பெய்யத் தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது, கடலூர், நாகை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் எனவும் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காற்றானது, 70 கிலோ மீட்டர் வேகத்தில் தொடங்கி, மெதுவாக அதிகரித்து 110 கிலோ மீட்டரை எட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்