புயல் குறித்த தகவல் - எப்எம் ரேடியோ தொடக்கம்

கஜா புயல் பற்றிய தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் பேரிடர் கால எப்.எம் தொடங்கப்பட்டுள்ளது
புயல் குறித்த தகவல் - எப்எம் ரேடியோ தொடக்கம்
x
கஜா புயல் பற்றிய தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் பேரிடர் கால எப்.எம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது. சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மக்கள் ரேடியோ மற்றும் மொபைல்போனில் 107 புள்ளி 8 அலைவரிசையில் கேட்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெள்ள நிவாரண தகவல், பேரிடர் கால பாதுகாப்பு நடவடிக்கை, மீனவர்களுக்கு தேவையான தகவல்கள் இதில் 24 மணி நேரமும் ஒலிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்