அரசு பள்ளியில் நடைபெற்ற தேர்தல் : மாணவர்களிடையே நடைபெற்ற வித்தியாசமான தேர்தல்

குழந்தைகள் தினத்தையொட்டி கரூர் அருகேயுள்ள அரசு பள்ளியில் மாணவர்களிடையே தேர்தல் நடத்தப்பட்டது.
அரசு பள்ளியில் நடைபெற்ற தேர்தல் : மாணவர்களிடையே நடைபெற்ற வித்தியாசமான தேர்தல்
x
* கரூர் மாவட்டம் தொட்டியபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தனியார் பள்ளிக்கு இணையாக அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

* இந்த நிலையில், குழந்தைகள் தினத்தையொட்டி அங்கு மாணவர்கள் மத்தியில் தேர்தல் நடத்தப்பட்டது. பரமத்தி வட்டார கல்வி அலுவலர் முருகன் இந்த தேர்தலை தொடங்கி வைத்தார். 

* 9 பதவிகளுக்கு 28 பேர் போட்டியிட்ட அந்த தேர்தலில் 68  மாணவ மாணவிகள் வாக்களித்தனர். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ் சான்றிதழ்களை வழங்கி, கிரீடம் சூட்டி வாழ்த்து தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்