சாலையில் கிடந்த 32 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
பதிவு : நவம்பர் 14, 2018, 07:11 AM
சாலையில் கிடந்த 32 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன், சாலையில் கிடந்த பையை எடுத்து பார்த்துள்ளார். அதில் 32 சவரன் தங்க நகை இருந்ததை அறிந்த அவர், அதனை உடனடியாக உடுமலை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து நகையை, அதனை தவறவிட்ட சரவணன் என்பவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். சாலையில் கிடந்த நகையை நேர்மையாக ஒப்படைந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டனுக்கு, போலீசார்  பொன்னாடை போர்த்தியும் பரிசு வழங்கியும் கௌரவப்படுத்தினர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.