மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜர்
x
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில்  கைது செய்யப்பட்ட  பேராசிரியை  நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தங்கள் மீது கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்கும் அடிப்படை முகாந்திரம் இல்லை என்றும்,  வழக்கிலிருந்து தங்களை  விடுவிக்க கோரியும்  3 பேரும் மனு தாக்கல் செய்தனர். இதனை எதிர்த்து சிபிசிஐடி போலீசாரும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இது குறித்து வாதிட நிர்மலா தேவி வழக்கறிஞர் அவகாசம் கேட்ட நிலையில்.  அதை ஏற்க  மறுத்த  நீதிபதி  வரும் 15 ஆம் தேதி 3 பேரையும் மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் நீதிபதி தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்