கந்தசஷ்டி விழா : பக்தர்கள் குவிந்ததால் களை கட்டியது சூரசம்ஹாரம்
பதிவு : நவம்பர் 14, 2018, 01:57 AM
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருச்செந்தூரில் குவிந்திருந்தனர். திருச்செந்தூர் கடற்கரையில் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுவாமி ஜெயந்தி நாதர், சூரனை வதம் செய்தார். 

சூரசம்ஹாரம் : " தந்தி டிவி " நேரலை ஒளிபரப்பு 

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை நமது " தந்தி டிவி" நேரலையாக ஒளிபரப்பு செய்தது. இதனால், லட்சக்கணக்கானோர் நேரிலும், கோடிக்கணக்கானோர் தொலைக்காட்சி மூலமும் சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டு களித்தனர். நாளை முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

மருதமலை கோயிலில் சூரசம்ஹாரம் : ஏராளமான பக்தர்கள் சுவாமி வழிபாடு 

இதேபோல் கோவை மாவட்டம் மருதமலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்வு விமரிசையாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட  தேரில் எழுந்தருளிய முருகப்பெருமான் சிங்கமுகன், யானைமுகன், பானுகோவன், காரகாசூரன் ஆகிய நான்கு பேரை வதம் செய்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். 

சண்முக பெருமானுக்கு 108 சங்குகளால் அபிஷேகம்

கந்தசஷ்டியையொட்டி, கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சாமிநாத கோவிலில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். யாகத்தை ஒட்டி, உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளிய சண்முகப் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், தேன், பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்களில் 108 சங்குகளை கொண்டு, அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முருகன் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம் : திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் வழிபாடு 

கந்த சஷ்டியைமுன்னிட்டு பவானி கூடுதுறையில் உள்ள முருகன் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக  உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு யாகங்களும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிவனடியார்கள் கந்த சஷ்டி கவசத்தை பாடினர். இந்த நிகழ்வில் கலந்து  கொண்ட பக்தர்கள் முருகனை வழிபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2739 views

பிற செய்திகள்

பெண்களுக்கான 'திருமதி சென்னை' போட்டி : இறுதிச் சுற்றில் பங்கேற்ற திருமணமான பெண்கள்

பெண்களுக்கான 'திருமதி சென்னை' போட்டி : இறுதிச் சுற்றில் பங்கேற்ற திருமணமான பெண்கள்

24 views

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

ஓடும் பேருந்தில் 4 மாத பெண் குழந்தை கடத்தல் : மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு

6 views

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திரும்பபெற கோரிக்கை

10 views

வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு

வீட்டுக்குள் புகுந்த 6அடி நீள நாகப்பாம்பு

6 views

ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு

ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு

7 views

1500 பேர் மட்டுமே மலையேற அனுமதி : சதுரகிரி மலையில் மார்கழி பூஜைக்கு அனுமதி

1500 பேர் மட்டுமே மலையேற அனுமதி : சதுரகிரி மலையில் மார்கழி பூஜைக்கு அனுமதி

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.