பட்டாசு தொழிற்சாலைகள் மூடல் : வருவாயின்றி திண்டாடும் தொழிலாளர்கள்

சிவகாசியில் உள்ள 1,400 க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி ஆலைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதால், பல லட்சம் தொழிலாளர்கள் வருவாயின்றி திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பட்டாசு தொழிற்சாலைகள் மூடல் : வருவாயின்றி திண்டாடும் தொழிலாளர்கள்
x
பட்டாசு வெடிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பல கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது. இனிமேல், அதிக புகை மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளைதான், உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனால், அதிருப்தி அடைந்த பட்டாசு உற்பத்தியாளர்கள் தொழிற்சாலைகளை காலவரையின்றி மூடியுள்ளனர். இதனால், பல லட்சம் தொழிலாளர்கள் வருவாயின்றி திண்டாடும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். பட்டாசு தொழிலை தவிர, வேறு தொழில் தங்களுக்கு தெரியாது என்றும் இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 




Next Story

மேலும் செய்திகள்