"பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்" - தேமுதிக தலைவர் விஜயகாந்த்

பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்குமாறு, தேமுதிக நிறுவன தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்
x
பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்குமாறு, தேமுதிக நிறுவன தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாணவி சவுமியா, சேலத்தில் 13 வயது மாணவி என தமிழ்நாட்டில் அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், தூக்கு தண்டனை விதித்தால் தான் இவற்றை தடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார். ஆட்சியாளர்களும், நீதித் துறையினரும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்