"கஜா புயல் சென்னை - நாகை இடையே கரையை கடக்கும்" - சென்னை வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் சென்னைக்கும் நாகைக்கும் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கஜா புயல் சென்னை - நாகை இடையே கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
கஜா புயல் தற்போது , சென்னைக்கு தென் கிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு  வடகிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து,  அடுத்த 2 நாட்களில்  வட மாவட்டங்களை நோக்கி நகர்ந்து, நாகை -சென்னை இடையே 15 ஆம் தேதி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வட தமிழகத்தில் சில பகுதிகளில், வரும் 15 ஆம் தேதி மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்றும், தென் தமிழகத்தின் ஒரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் என்ற ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்