ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னையில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x
வில்லிவாக்கத்தில் கடந்த 1ம் தேதி நடைபெற்ற கொள்ளை முயற்சி தொடர்பாக, போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில், முகமூடி அணிந்த மர்ம நபர்களின் உருவங்கள் பதிவாகி இருந்தன. இந்நிலையில், அதே பகுதியைச்  சேர்ந்த வினோத் குமார், மணிவண்ணன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவரும், ஏற்கனவே பல்வேறு வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்