இணையதளம் மூலம் கல்வி அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது - செங்கோட்டையன்

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இணையதளம் மூலம் கல்வி கற்கும் நடைமுறை அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
இணையதளம் மூலம் கல்வி அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது - செங்கோட்டையன்
x
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற்ற பள்ளி நூற்றாண்டு விழாவில்  அமைச்சர்கள் செங்கோட்டையன்,  நிலோபர் கபில் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்துப் பாடத் திட்டங்களும் கணினிமயமாக்கப்பட்டு,  இணையதளம் மூலம் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். அடுத்த மாதம் முதல் இது செயல்பாட்டிற்கு வரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் வருகை பயோமெட்ரிக் முறையில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story

மேலும் செய்திகள்