மண்வெட்டி தயாரிப்பிற்கு பேர் போன கிராமம் : காத்திருந்து வாங்கிச் செல்லும் விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தில், மண்வெட்டியை காத்திருந்து வாங்கிச் செல்லும் விவசாயிகள்.
மண்வெட்டி தயாரிப்பிற்கு பேர் போன கிராமம் : காத்திருந்து வாங்கிச் செல்லும் விவசாயிகள்
x
* விவசாயத்திற்கு புத்தம் புதிய கருவிகள் பல வந்தாலும் மண்வெட்டிகள் என்றால் அது கீரமங்கலம் மண்வெட்டிகள் தான் என்று சொல்லுமளவிற்கு அதன் மவுசு குறையவில்லை.

* உழுவதற்கு டிராக்டர் போன்ற நவீன இயந்திரங்கள் வந்தது போல அடுத்தடுத்து மனித உழைப்பை குறைக்கும் விதமாக பயிர்களை நடவு செய்யவும் களை பறிக்கவும் மருந்து தெளிக்கவும் நவீன இயந்திரங்கள் வந்துவிட்டன.

* ஆனாலும் இன்றும் விவசாயத்திற்கு எத்தனை நவீன கருவிகள் வந்தாலும் வரப்புகள் சரி செய்யவும் தண்ணீர் பாய்ச்சவும் பயன்படுவது மண்வெட்டிகள்தான்.

* புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கீரமங்கலத்தில் தயாரிக்கப்படும் மண்வெட்டிகளை வைத்து விவசாய வேலை செய்யும் போது களைப்பு தெரியாது என்று சொல்லும் விவசாயிகள் பருவகாலங்களில் கீரமங்கலம் நோக்கி வருவது வழக்கமாக உள்ளது.

* மண்வெட்டி தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள முருகன் பரம்பரை பரம்பரையாக 50 ஆண்டுகளுக்கும் மேலாக மண்வெட்டி தொழில் செய்து வருவதாக தெரிவிக்கிறார்.

* கடந்த ஆண்டு வரை ஒரு மண்வெட்டி ரூ 400 முதல் 500 வரை விற்பனை செய்ததாகவும், மூலப்பொருட்களின் விலை உயர்வால், இந்த ஆண்டு ஒரு மண்வெட்டி 650 ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறுகிறார்.

* மண்வெட்டி வேண்டும் என்று வரும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் போதிய அளவு உற்பத்தி செய்ய முடியவில்லை. அதனால் இரவு பகலாக மண்வெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நடக்கிறது.

* தஞ்சாவூர் புதுக்கோட்டை  பட்டுக்கோட்டை ஆவுடையார்கோயில் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் மண்வெட்டி வாங்க விவசாயிகள் கீரமங்கலம் நோக்கி வருகிறார்கள்.



Next Story

மேலும் செய்திகள்