சிறப்பு பேருந்துகள் மூலம் 7,37,481 பேர் பயணம் : அரசு விரைவு போக்குவரத்து கழகம்
பதிவு : நவம்பர் 07, 2018, 06:40 PM
தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 7 லட்சத்து 37 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
* தீபாவளியையொட்டி கடந்த 2 ந்தேதி முதல் 5ந்தேதி வரை சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 13ஆயிரத்து 563 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகஅரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

* கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 7 ஆயிரத்து 197 பேருந்துகளும், மாதாவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 954 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

* இதேபோல் கே.கே. நகர், தாம்பரம் சானிடேரியம், இரயில்நிலையம், பூந்தமல்லி ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டை விட கூடுதலாக 2 ஆயிரத்து 570 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* சென்னையிலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 7 லட்சத்து 37 ஆயிரத்து 481 பயணம் செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு 1 லட்சத்து 84 ஆயிரத்து 857 பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

* தமிழகம் முழுவதும் நாளை வரை 1 லட்சத்து 62 ஆயிரத்து 252 பயணிகள் முன் பதிவு செய்துள்ளதாகவும் , இதன் மூலம் 7 கோடியே 63 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

புயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...

சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.

111 views

எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி

இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

166 views

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

457 views

பிற செய்திகள்

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கம்...

டிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனையுடன் நீக்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

31 views

கோலாகலமாக நடைபெற்ற தர்மராஜா கோயில் தேர்த்திருவிழா

ஒசூர் டி.கொத்தப்பள்ளி தர்மராஜா கோவிலில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

15 views

ஆற்றில் குளித்த தொழிலாளியை இழுத்துச் சென்ற முதலை

சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயமணி என்பவர் தனது மனைவியுடன் கொள்ளிடம் ஆற்றில் மேலகுண்டலபாடி கிராமத்தில் குளித்துள்ளார்.

143 views

கோவில் திருவிழாவில் தகராறு எதிரொலி : கொலை செய்வதற்காக பதுங்கியிருந்தவர்கள் கைது

சென்னை தண்டையார்பேட்டையில் கோவில் திருவிழா தகராறில் பழி தீர்ப்பதற்காக ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

59 views

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட தங்கும் விடுதிகள் : பூட்டி சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு - சீசன் நேரத்தில் சீல் அகற்றிய விடுதி உரிமையாளர்கள்

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், கொடைக்கானலில் பூட்டி சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதிகள் சட்டவிரோதமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், நகராட்சி அதிகாரிகள் அந்த விடுதிகளை மீண்டும் பூட்டி சீல் வைத்தனர்.

32 views

ரூ44,43,000 மதிப்புள்ள 1,364 கிராம் தங்கம் பறிமுதல்

சென்னையை சேர்ந்த ரியாஸ் அகமது என்பவர் பெல்ட்டில் மறைத்து வைத்திருந்த 972 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.