700 ஆண்டு காலக் கடிகாரம் : வியக்க வைக்கும் விக்கிரமசோழனின் விஞ்ஞானம்
பதிவு : நவம்பர் 05, 2018, 10:04 AM
விக்கிரமசோழனின் காலத்தில் அமைக்கப்பட்ட பல நூறு ஆண்டுகள் பழமையான இயற்கையான கடிகாரத்தின் சாதனையைப் பார்க்கலாம்..
கடிகாரங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பாக, சூரியன் உதிப்பது முதல் மாலையில் மறைவது வரைக்கும் பார்த்துதான் நேரம் சொல்லும் வழக்கம் கிராமங்களில் இருந்தது.

கடிகாரங்கள் ஆடம்பர பொருளாக இருந்த காலகட்டத்தில் கிராம மக்களின் நேரம் பார்க்கும் கருவி சூரியன்தான். எந்த திசையில், எந்த கோணத்தில் இருக்கிறது என்பதை வைத்தே அப்போதைய நேரத்தைக் கணக்கிட்டு வந்தனர்.

இன்றும் ஆடு, மாடு மேய்க்கச் செல்லும் கிராமத்து பெரியவர்களுக்கு சூரியன்தான் நேரம் சொல்கிறான்.

சூரியனை வைத்தே நேரத்தை துல்லியமாகக் கணிக்கும் சூரியக் கடிகாரத்தை 700 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து நிறுவினான் மாமன்னன் விக்கிரமசோழன். சூரிய நிழலைக் கொண்டு அவன் நிறுவிய இந்தக் கடிகாரம் இன்றும் கம்பீரமாக நின்று துல்லியமாக நேரத்தைக் காட்டுகிறது. இந்த கண்டுபிடிப்பை நிறுவிய இடம்தான் திருவிசநல்லூர். இந்த ஊரின் சிறப்பும் இந்த சூரியக் கடிகாரம்தான்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது திருவிசநல்லூர். ஊரின் நடுநாயகமாக உள்ள சிவன் கோயிலில்தான் விக்கிரமசோழன் திருச்சுற்று மாளிகை உள்ளது. சுமார் 30 அடி உயரம் கொண்ட இந்த சுற்றுச்சுவரில்தான் சோழர் கால சூரியக் கடிகாரம் உள்ளது. சுவற்றில், பெரிய இரும்பு கம்பி நடப்பட்டு அதனைச் சுற்றி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எண்கள் அரை வட்ட அளவில் எழுதப்பட்டுள்ளன. சூரிய ஒளி இருக்கும் நேரத்தில் இந்த கம்பியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அந்த எண்ணைக் கொண்டது தான் அப்போதைய நேரம்.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த சூரியக் கடிகாரம், பண்டைய தமிழ் எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது. அதன்பிறகு கோயில் திருப்பணிகளின்போது பண்டைய எழுத்துகளுக்குப் பதில் தற்போதைய தமிழ் எழுத்து வடிவத்தில் மாற்றி எழுதி வைக்கப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளைக் கடந்தாலும் காலத்தால் அழிக்க முடியாத காலக் கடிகாரமான இது தமிழர்களின் அரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது.

கும்பகோணத்திற்கு எப்போவாவது செல்லும் வாய்ப்பு அமைந்தால், நீங்களும் ஒருமுறை சூரியக் கடிகாரத்தை பார்க்க நேரம் ஒதுக்கி திருவிசநல்லூருக்கு சென்று வரலாம்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2305 views

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

6209 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

6917 views

பிற செய்திகள்

கும்பகோணத்தில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை...

கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரண்டு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

107 views

இலங்கையில் அடுத்த ஆண்டு தமிழ் கலைஞர்கள் மாநாடு

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது.

8 views

கலவரத்தை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே கலவரம் எந்த விதத்திலும் தீவிரம் அடைந்து விடக்கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறினார்.

214 views

"கல்வி தொலைக்காட்சி" - இன்று தொடக்கம்

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் சேவை இன்று தொடங்குகிறது.

55 views

நாமக்கல் : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

10 views

மொய் விருந்து நடத்தி வட்டி தொழில்... எதிர்பார்த்த மொய்ப்பணம் வசூலாகாத‌தால் விரக்தி

மதுரை அருகே மொய் விருந்தில் எதிர்பார்த்த அளவு மொய் வசூல் ஆகாத விரக்தியில் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

343 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.