பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

பாசனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது.
பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
x
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்குவது, பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. இந்நிலையில் தற்போது பாசனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையிலிருந்து பவானி ஆற்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது. இதனால் கீழ்பவானி ஆற்றில் மட்டும் பாசனத்திற்காக 2 ஆயிரத்து 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்