நான்கு உலோகங்களை கொண்டு செய்யப்பட 155 கிலோ 'தூண்டா' விளக்கு

கும்பகோணத்தில், நான்கு உலோகங்களை கொண்டு வித்தியாசமான தூண்டா விளக்கு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
நான்கு உலோகங்களை கொண்டு  செய்யப்பட 155 கிலோ தூண்டா விளக்கு
x
ஐம்பொன் சிலைகள், விளக்குகள் தயாரிப்புக்கு புகழ் பெற்றது, கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை. இதன் அருகில் உள்ள திம்மக்குடியில் ஐந்தே முக்கால் அடி உயரத்திற்கு செம்பு, வெண்கலம், பித்தளை உள்ளிட்ட 4 உலோகங்களை கொண்டு கலைநுணுக்கத்துடன் கூடிய தூண்டா விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 155 கிலோ எடையுள்ள இந்த விளக்கில் தீபம் எரியும் பகுதி, எண்ணெய்யில் மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று மாத காலத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் உழைப்பில் இந்த தூண்டா விளக்கு  தயாரிக்கப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மௌன சுவாமிகள் கோவிலுக்கு இந்த வித்தியாசமான விளக்கு தயாரிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்