மதுரை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு சோதனை

மதுரை மாநகராட்சி நகர பொறியாளர் அலுவலக அறையில் தீபாவளி பரிசு பொருட்கள் அரசியல்வாதிகளுக்கும், மற்ற துறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
மதுரை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு சோதனை
x
* மதுரை மாநகராட்சி நகர பொறியாளர் அலுவலக அறையில் தீபாவளி பரிசு பொருட்கள் அரசியல்வாதிகளுக்கும், மற்ற துறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு  போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுரை லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையில் ஆய்வாளர்கள் குமரகுரு கண்ணன், அம்புரோஸ் ஜெயராஜ், சூர்யகலா, ஹேமலதா உள்ளிட்ட 15  போலீஸார்  அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூபாய் 2 லட்சத்து 51 ஆயிரத்து 500 மற்றும் 11 வெள்ளி காசுகள், 2 வெள்ளி டம்ளர்கள், 2 வெள்ளி தட்டுகள் ஏராளமான இனிப்பு, பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர். 

* மேலும், மதுரை மாநகராட்சியின் நகர பொறியாளர் அரசு, அவரின் உதவியாளர் மனோகரன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சந்திரமோகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்