நியூட்ரினோ திட்டத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க கூடாது - வைகோ

நியூட்ரினோ திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
நியூட்ரினோ திட்டத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க கூடாது - வைகோ
x
நியூட்ரினோ திட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கக்கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். நியூட்ரினோ திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்ததற்கு, வரவேற்பு தெரிவித்த அவர், இதனால், நிம்மதியும், நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஏனெனில் இந்த திட்டம் ஒருவேளை வந்தால், முல்லைப்பெரியாறு அணையும், இடுக்கி அணையும் இடிந்து நொறுங்கும் அபாயம் உள்ளதாக வைகோ எச்சரித்துள்ளார். தென் தமிழகத்தில், 5 மாவட்டங்களில், விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகும் என்றும் பொதுமக்களுக்கும் குடிக்க தண்ணீர் கிடைக்காது என்றும் தமது அறிக்கையில், வைகோ அச்சம் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்