தீபாவளி பண்டிகைக்கு பெண்களை கவரும் புதுவரவு தங்க நகைகள்

தீபாவளி பண்டிகைக்கு புதிய நகைகள் வாங்கும் ஆர்வம் பெண்களிடம் அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு பெண்களை கவரும் புதுவரவு தங்க நகைகள்
x
என்னதான் விலை ஏறினாலும் இறங்கினாலும் தங்க நகைகள் மீதான விருப்பம் என்பது அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். காரணம் நகை என்பதை தாண்டி முதலீடு சார்ந்த ஒரு பொருளாக தங்கம் மாறிப் போனதால் அதை வாங்குவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். 

திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளைப் போலவே பண்டிகைகளும் நகைகள் வாங்குவதற்கு ஒரு காரணமாகவே அமைந்து விட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு தங்க நகைகள் வாங்க கடைகளில் பெண்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதற்கேற்றார் போல புதுப்புது நகைகளும் அறிமுகமாகி இருக்கிறது.

தங்கத்தில் அதிக எடை கொண்ட நகைகளை அணியும் பெண்கள் ஒரு பக்கம் இருந்தாலும் பார்ப்பதற்கு ஸ்டைலிஷ் தோற்றம் தரும் சிம்பிள் நகைகள் தான் இளம்பெண்களின் விருப்பத்  தேர்வாக இருக்கிறது. விழாக்காலங்களில் அணிந்து செல்வதற்கு ஏற்ற நகைகளும் சந்தைகளில் அணிவகுத்து நிற்கிறது. டெம்பிள் ஜூவல்லரி, தெய்வங்களின் உருவங்கள் பதித்த நகாசு ஜூவல்லரிகளும் இந்த ஆண்டு அதிகம் விற்பனையாகும் மாடலாக இருக்கிறது.

கல் பதித்த நகைகள் என்றால் வெள்ளை, சிவப்பு, பச்சை என்ற வண்ணங்களை தாண்டி இந்த ஆண்டு போல்கி கற்கள் என்ற பிங்க் நிற கற்கள் பதித்த நகைகளில் செட் வந்திருக்கிறது. வளையல், தோடு, ஒட்டியாணம், நெக்லஸ் என எல்லாம் செட்டாக கிடைப்பதால் பெண்கள் இதனை விருப்பமாக வாங்கிச் செல்கின்றனர்.

இதேபோல் வெள்ளியிலும் பல்வேறு நகைகள் இந்த ஆண்டு வந்திருக்கிறது. வெள்ளியினால் செய்யப்பட்ட சுவாமி சிலைகள், மெட்டி, கொலுசுகள் என ஏகப்பட்ட பொருட்கள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கும், நகைகள் மீது ஆர்வம் காட்டும் பெண்களுக்கும் உற்சாகம் கொடுக்கும் வகையிலான நகைகள் இந்த ஆண்டு பண்டிகையை வண்ணமயமாக்கும்.


Next Story

மேலும் செய்திகள்