லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையின் போது வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரி மரணம்

கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையின் போது மாரடைப்பு ஏற்பட்டு வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையின் போது வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரி மரணம்
x
கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதிகாரி முதல் அடிமட்ட ஊழியர் வரை அனைவரிடமும், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்  துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். 

அப்போது பாபு என்ற பிரேக் இன்ஸ்பெக்டருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையின் போதே அதிகாரி மரணமடைந்தது கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story

மேலும் செய்திகள்