மைனர் பெண்கள் ஓடிப் போவதை தடுக்க நடவடிக்கை என்ன? - அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
பதிவு : நவம்பர் 02, 2018, 03:16 PM
திருமணமானவர்களுடன் மைனர் பெண்கள் ஓடிப் போவதை தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் தன் மகள், 45 வயது நபருடன் ஓடிப் போய் விட்டதாகக் கூறி அப்பெண்ணின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், சமீப காலமாக மைனர் பெண்கள், வயதான மற்றும் திருமணமானவர்களுடன் ஓடிப் போவது அதிகரித்து வருவது குறித்து வேதனை தெரிவித்தனர்.
 
இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய  நீதிபதிகள்,  இது போன்ற நிகழ்வுகளை தடுக்க அரசு  எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினர்.  இந்த வழக்குகளை கையாள ஏன் தனிப்பிரிவை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.  இந்த வழக்கில்  சமூக நலத் துறை செயலாளரையும், டி.ஜி.பி.யையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் , கடந்த 10 ஆண்டுகளில் வீட்டை விட்டு ஓடிப்போன மைனர் பெண்கள் எத்தனை பேர்,  போக்சோ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி நவம்பர் 8 ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டனர்.

பிற செய்திகள்

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம்

தாராபுரத்தில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நடந்த பிரசவத்தில் அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது.

29 views

"புயல் அடித்தது முதல் பச்சை குழந்தைக்கு பால் இல்லை"- புயலால் பாதிக்கப்பட்டவர்

கஜா புயலால்,வேளாங்கண்ணி சுற்றியுள்ள,கைகாட்டி, பி.ஆர்.புரம், பூவைத்தேடி உள்ளிட்ட எட்டு வீடுகளை இழந்து 8 கிராம மக்கள் தங்குவதற்கு முகாம்கள் இல்லை என புகார்..

74 views

கஜா புயல் : தாக்குதலுக்கு ஆளான நாகை மாவட்டம்

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் கடல் நீர் விவசாய நிலத்திற்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

44 views

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் - காலிறுதி சுற்றுக்கு மேரி கோம் தகுதி

மகளிருக்கான உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீராங்கனை மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.

35 views

இறுதிப்போட்டியில் ஜோகோவிச்- ஸ்வெரேவ் மோதல்

2வது அரையிறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் எளிதில் வெற்றி பெற்றார்.

26 views

உலக ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் - அரையிறுதி சுற்றில் ஃபெடரர் தோல்வி

உலக ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.

54 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.