தீபாவளி பண்டிகைக்கு ஆம்னி பேருந்துகளில் இரு மடங்கு கட்டணம் வசூல் - பயணிகள் அவதி

தீபாவளி பண்டிகைக்கு ஆம்னி பேருந்துகளில் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்கு ஆம்னி பேருந்துகளில் இரு மடங்கு கட்டணம் வசூல் - பயணிகள் அவதி
x
* வரும் 6ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பயணிக்கும் மக்கள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய முன் பதிவு செய்கின்றனர். 

* அரசு பேருந்தை காட்டிலும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் வசதி என்பதால் பெரும்பாலான பயணிகள் இதனை தேர்வு செய்து வருகின்றனர். 

* ஆனால் ஆம்னி பேருந்துகளில் பண்டிகை நாட்களில் 20 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பது வாடிக்கையானதாகவே இருந்து வந்தது. 

* ஆனால் தற்போது ஆம்னி பேருந்துகளில் இரு மடங்கு, மூன்று மடங்கு என கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

* சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வதற்கு சாதாரண பேருந்தில் 600 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் அது தற்போது ஆயிரத்து 200 ஆக உயர்ந்திருக்கிறது. ஏசி பேருந்துக்கு 850 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் அது தற்போது ஆயிரத்து 800 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

* சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சாதாரண பேருந்துக்கு 700 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் அது ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏசி பேருந்து ஆயிரத்து 100 ரூபாயாக இருந்த நிலையில் அது தற்போது 2 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. 

* சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு சாதாரண பேருந்துக்கு வசூலிக்கப்பட்ட 550 ரூபாயானது தற்போது ஆயிரத்து 200 ஆகவும், ஏசி பேருந்து 990 ரூபாயில் இருந்து ஆயிரத்து 700 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.. 

* சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண பேருந்துக்கு 500 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ஏசி பேருந்தின் கட்டணமும் 650 ரூபாயில் இருந்து ஆயிரத்து 400 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.. 


Next Story

மேலும் செய்திகள்