பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு அநீதி- வைகோ

கடந்த 2015ஆம் ஆண்டு குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு பதவி ஒதுக்கீடு அளிப்பதில் மத்திய பணியாளர் நலத்துறை அநீதி இழைத்துள்ளதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு அநீதி- வைகோ
x
கடந்த 2015ஆம் ஆண்டு குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு பதவி ஒதுக்கீடு அளிப்பதில் மத்திய பணியாளர் நலத்துறை  அநீதி இழைத்துள்ளதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசியல் சட்டத்தில் இடம்பெறாத பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோரைப் பிரித்திடும் கிரிமிலேயர் எனும் சமூக அநீதியை முற்றிலுமாக நீக்குவதே பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய சமூக நீதியை வழங்கும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு உரிய வகையில் அரசியல் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்