தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை

தமிழகம் முழுவதும் அரசு நிறுவனங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 44 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை
x
* தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத பணம் அதிக அளவில் புழங்குவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து, டாஸ்மாக்,  பொதுப்பணித்துறை, நகராட்சி, அறநிலையத்துறை  மாசுக்கட்டுபாட்டு வாரியம் மற்றும் ஆவின் அலுவலகம் என 24 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

* இந்த சோதனையில் அதிகபட்சமாக வேலூர் ஆவின் நிலையத்தில் இருந்து கணக்கில் காட்டப்படாத 14 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து 9 லட்சத்து 99 ஆயிரமும், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலிருந்து 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயையும் அதிகாரிகள் கைப்பற்றினர். 

* மாசுகட்டுபாட்டு வாரியத்தின் சென்னை மாவட்ட மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரமும், நீலகிரி மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து 2 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயும் கைபற்றியுள்ளனர்.

* இந்த சோதனையில் குறைந்தப்பட்சமாக நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திலில் இருந்து 4 ஆயிரம் ரூபாயும், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் இருந்து 6 ஆயிரம் ரூபாயும் கைப்பற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்