பெண் பார்க்க அழைத்து சென்று நகை, பணம் பறிப்பு : திருமண இணையதளத்தில் விவரங்களை பெற்று மோசடி

திருமண தகவல் இணையதளத்தில் செல்போன் எண்ணை பெற்று பெண் பார்க்க தனியார் விடுதிக்கு அழைத்து சென்று ஒருவரிடம் பணம், நகையை பறித்த சென்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
பெண் பார்க்க அழைத்து சென்று நகை, பணம் பறிப்பு : திருமண இணையதளத்தில் விவரங்களை பெற்று மோசடி
x
* சென்னை MMDA காலனியை சேர்ந்த 43 வயதான காளிச்சரண் என்பவர் திருமணம் செய்ய பெண் தேடி திருமண தகவல் இணையம் தளம் ஒன்றில் தனது விவரங்களை பதிவிட்டிருந்தார். 

* கடந்த வாரம் அவரை தொடர்பு கொண்ட பிரியா என்ற பெண்  அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்திற்கு  வர சொல்லி சந்தித்து பேசியுள்ளார். பின்னர்   வடபழனியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று திருமணம் தொடர்பாக பேசலாம் என்று கூறிய பிரியா காளிச்சரணை அங்குள்ள  தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

* ஏற்கனவே  அங்கு இருந்த 2  ஆண்கள் தங்களை போலீசார் என்று கூறி , செல்போன், நகை, ஏடிஎம் கார்டு உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டு, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு கூறி சென்று விட்டனர். 

* அதிர்ச்சி அடைந்த காளிச்சரண், வடபழனி காவல் நிலையம் சென்று விசாரித்தபோது , தன்னை பிரியா உள்ளிட்ட கும்பல் ஏமாற்றியது தெரியவந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார்  தனியார் தங்கும் விடுதியில் உள்ள சிசிடிவி  காட்சிகளை ஆய்வு செய்தனர் 

* பின்னர் காளிச்சரணின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அக்கும்பல் 42 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்த ஏடிஎம் மையத்தின் சிசிடிவி காட்சி மற்றும் செல்போன் விவரங்களை வைத்து, காளிச்சரணிடம் நகை பணம் பறித்த கோகுலகிருஷ்ணன் , சிவா மற்றும்  சாவித்திரி ஆகியோரை கைது செய்தனர். திருமணத்திற்கு இணையதளத்தில் விவாகரத்தானவர்கள், மனைவியை இழந்தவர்கள்
 
* 40 வயதிற்கு மேற்பட்டோர் என இரண்டாவது திருமணத்திற்கு பதிவு செய்தவர்களை குறிவைத்து இக்கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

* பல்வேறு வழக்குகள் காரணமாக பலமுறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அக்கும்பல்  கோயம்புத்தூரில் 70 வயது முதியவரை ஏமாற்றி ஒரு காரை திருடி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 


Next Story

மேலும் செய்திகள்