தமிழகம் முழுவதிலும் கோவில் கடைகளை காலி செய்ய ஜன.31 வரை கால அவகாசம் நீடிப்பு

தமிழகம் முழுவதிலும் அனைத்து கோவில் கடைகளை காலி செய்வதற்கு ஜனவரி 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் கோவில் கடைகளை காலி செய்ய ஜன.31 வரை கால அவகாசம் நீடிப்பு
x
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் அனைத்து கோவில்களிலும் உள்ள கடைகளை காலி செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, கோவில் கடைக்காரர்கள் சார்பாக பல்வேறு மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டடன. இந்த மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள் புஷ்பா சத்ய நாராயணா, கிருஷ்ணவள்ளி கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், கடைகளை காலி செய்யும் உத்தரவை ரத்து செய்யக் கோரிய அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், கோவில் கடைகளை காலி செய்வதற்கான கால அவகாசத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டித்தும் உத்தரவிட்டனர். Next Story

மேலும் செய்திகள்