டெங்கு - பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சிதம்பரம் அருகே கிள்ளை கலைஞர் நகரில் பழங்குடி இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் டெங்கு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
டெங்கு - பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x
150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, சார் ஆட்சியர் விசு மகாஜன் தொடங்கி வைத்தார். இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி ரேடியோ இல்லாததால் இந்த பேரணி நடத்தப்பட்டதாக சமூக ஆர்வலர் பூராசாமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்