வயதான தம்பதி கொலையில் 2 பேர் கைது..!
திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் அருகே உள்ள நாச்சி பாளையம் பகுதியில் வயதான தம்பதியான முத்துகுமாரசாமி தெய்வாத்தாள் இருவரும் கடந்த டிசம்பரில் கொலை செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 6 பவுன் தாலி செயின், மோதிரம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த சித்திரை ராஜா மற்றும் அவரின் நண்பர் சுயம்புலிங்கம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திராவுக்கு தப்பியோடிய அவர்களை குண்டூரில் போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.
Next Story