தீபாவளி பண்டிகைக்காக தயாராகும் பட்டாசுகள் - கிப்ட் பாக்ஸ்களுக்கு அதிகரிக்கும் மவுசு
பட்டாசு பிரியர்களுக்கு ஏற்ற கிப்ட் பாக்ஸ் செட்
பண்டிகையை வண்ணமயமாக மாற்றும் பட்டாசுகள் என்றாலே குழந்தைகளுக்கு குதூகலம் தான்... விதவிதமான பட்டாசுகளை தனித்தனியாக வாங்குவது கொஞ்சம் காஸ்ட்லியானதாக சிலருக்கு தெரியும். அவர்களை போன்றவர்களுக்காகவே அறிமுகமானது தான் கிப்ட் பாக்ஸ் வகைகள்... விதவிதமான பட்டாசுகளை எல்லாம் ஒன்றிணைத்து கிப்ட் பாக்ஸ் என்ற பெயரில் கடைகளில் விற்பதை வாங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டுவர்.. கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், சாட்டை, புஷ்வாணம், வெடிகள் என எல்லாம் சேர்த்து இந்த பெட்டியுடன் வரும்.. விலைக்கு ஏற்றார் போல பட்டாசுகளின் வகையும் அதிகரிக்கும்..அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கொடுப்பதற்கும் சரி, நண்பர்களுக்கு பரிசளிக்கவும் இந்த கிப்ட் பாக்ஸ் பட்டாசு வகைகள் சரியான தேர்வாக இருக்கிறது...இந்த ஆண்டு தீபாவளிக்கு 75 பட்டாசு வகைகளை உள்ளடக்கி ஜம்போ ரக கிப்ட் பாக்ஸ் புதுவரவாக வந்திருக்கிறது.
Next Story