அர்ஜுன் சம்பத்தை கொல்ல திட்டமா? - வழக்கு விசாரணை என்ஐஏவுக்கு மாற்றம்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை கொல்ல சதி செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்ட வழக்கு, தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது.
அர்ஜுன் சம்பத்தை கொல்ல திட்டமா? - வழக்கு விசாரணை என்ஐஏவுக்கு மாற்றம்
x
கடந்த மாதம் ஒன்றாம் தேதி கோவை ரயில் நிலையம் அருகே நடந்த சோதனையின் போது, சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 2 நாள் நடத்தப்பட்ட விசாரணையில், பல அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனை தொடர்ந்து கோவை காவல்துறையிடம் இருந்து இந்த வழக்கு, தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் இதற்கான முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்