கீழடி அகழாய்வு அறிக்கை - ஒப்படைக்க உத்தரவு

கீழடி அகழாய்வு அறிக்கையை தமிழக தொல்லியல் துறையிடம் ஒப்படைக்குமாறு மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கீழடி அகழாய்வு அறிக்கை - ஒப்படைக்க உத்தரவு
x
* கீழடி அகழாய்வு அறிக்கை தயாரிக்க பெங்களூரு தொல்லியல் துறை கண்காணி்ப்பாளரை நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி மதுரையை சேர்ந்த  பிரபாகர் பாண்டியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். 

* மதுரையை அடுத்த கீழடியில் கடந்த 2013 ஆண்டு முதல் அகழாய்வு நடைபெற்று வரும் நிலையில் அதனை மேற்கொண்ட மத்திய  தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீரென  அசாம்  மாநிலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

* அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான ஆய்வில், 5ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், கீழடி அகழாய்வு குறித்த ஆய்வு அறிக்கையை தயாரிக்க  பெங்களூரு தொல்லியல் துறை கண்காணிப்பாளருக்கு மத்திய தொல்லியல்துறை  உத்தரவிட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

* பெங்களூருவில் பாதுகாத்து வரும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட , பழங்கால பொருட்களை  ஒப்படைக்குமாறு  அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு  
உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்  மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதுதமிழ் கலாசாரத்தின் பழமையை மறைக்கும் நோக்கில்சில அதிகாரிகளின் துணையுடன் மத்திய அரசு செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

* கீழடி அகழாய்வு அறிக்கை தயாரிக்க பெங்களூரு தொல்லியல் துறை கண்காணி்ப்பாளரை நியமித்து, மத்திய தொல்லியல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது

* இந்த மனு  நேற்று விசாரணைக்கு வந்த போது, கீழடியில் முதல்  இரண்டு கட்ட அகழ்வாய்வுஅறிக்கையை தயார் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

* முதல் இரண்டு கட்ட அகழாய்வில் கண்டெடுக்கபட்ட பொருட்கள்,  இரண்டாயிரத்து 300 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வில் தெரிய 
வந்துள்ளதாகவும் , மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் கண்டெடுக்கபட்ட பொருட்கள் கார்பன் சோதனைக்கு அனுப்பபட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் வர 6 மாதங்கள் ஆகும் என்றும் மத்திய தொல்லியல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

* மத்திய தொல்லியல் துறையிடம் உள்ள கீழடி அகழாய்வு அறிக்கையை தமிழக தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிபதிகள்,  கீழடி அகழாய்வு, வரலாற்றையே மாற்றி அமைக்க கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்