பள்ளி மாணவன் இறப்பில் சந்தேகம் : உடலை தோண்டி எடுத்து விசாரணை

சிவகாசி அருகே பள்ளி மாணவன் ராஜ்குமார் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டதால், நல்லடக்கம் செய்த இடத்தில் இருந்து மாணவனின் உடலை தோண்டி எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.
பள்ளி மாணவன் இறப்பில் சந்தேகம் : உடலை தோண்டி எடுத்து விசாரணை
x
சிவகாசி அருகே பள்ளி மாணவன் ராஜ்குமார் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டதால், நல்லடக்கம் செய்த இடத்தில் இருந்து மாணவனின் உடலை தோண்டி எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். ராஜ்குமார் கடந்த அக்டோபரில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது தந்தை கணேசன், மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். விசாரணையில் ராஜ்குமாரின் புதைக்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனை நடத்தி வரும் நவம்பர் 8ம் தேதி அறிக்கை அளிக்குமாறு காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் ராஜ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்