மக்களவைத் தேர்தலுடன் தான் 20 தொகுதி தேர்தல் - பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன்

சர்தார் வல்லபாய் படேலின் 143- வது பிறந்த நாள் விழா, சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு அறக்கட்டளை சார்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது
மக்களவைத் தேர்தலுடன் தான் 20 தொகுதி தேர்தல் - பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன்
x
சர்தார் வல்லபாய் படேலின் 143- வது  பிறந்த நாள் விழா, சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு அறக்கட்டளை சார்பாக சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில்  நடைபெற்றது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன்  முன்னாள் டி.ஜி.பி. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இல. கணேசன், தமிழகத்தில் காலியாகவுள்ள 20 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு நடைபெற வாய்ப்பு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்  தெரிவித்துள்ளார்.  சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மக்களவை தேர்தலோடு நடைபெறவே வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்