பரபரப்புக்கு இடையே நடந்த திருநங்கை திருமணம்

தூத்துக்குடியில் அருண் குமார் என்பவருக்கும், ஸ்ரீஜா என்ற திருநங்கைக்கும் பெரும் பரபரப்புக்கு இடையே திருமணம் நடந்துள்ளது.
பரபரப்புக்கு இடையே நடந்த திருநங்கை திருமணம்
x
தூத்துக்குடியில் அருண் குமார் என்பவருக்கும், ஸ்ரீஜா என்ற திருநங்கைக்கும் பெரும் பரபரப்புக்கு இடையே திருமணம் நடந்துள்ளது. 6 ஆண்டு காதலுக்கு பின், இரு வீட்டார் சம்மதத்துடன் தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் சிவன் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. முன் பதிவு செய்யப்பட்டும், கோவிலில் திருமணம் செய்து வைக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதனையடுத்து திருநங்கைகள் கோவில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்ற போது, தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனையடுத்து அருண் குமார், ஸ்ரீஜா திருமணம் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்