செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக வாழும் மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளில் மலைவாழ் மக்கள் அதிக அளவில் கொத்தடிமைகளாக உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொண்டு நிறுவனம் ஒன்று மூலம் புகார் அளிக்கபட்டுள்ளது.
செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக வாழும் மக்கள்
x
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளில் மலைவாழ் மக்கள் அதிக அளவில் கொத்தடிமைகளாக உள்ளதாக  மாவட்ட நிர்வாகத்திற்கு தொண்டு நிறுவனம் ஒன்று மூலம் புகார் அளிக்கபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  சார்-ஆட்சியர் உமாமகேஸ்வரி, பயிற்சி சார் ஆட்சியர் பிரதாப் ஆகியோர் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் உள்ள சாந்தகுமார் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது, அங்கு பணிபுரியும் பெண் ஓருவர் உமாமகேஸ்வரி காலில் விழுந்து தன்னை இந்த  மீட்குமாறு கண்ணீருடன் கதறி அழுது கெஞ்சியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை தனியாக வசிக்க உத்தரவிட்ட சார் ஆட்சியர், தேவையான உதவிகள் செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்