ஓடும் ரயிலில் 5 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - பிடிபட்ட கொள்ளையர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

ஓடும் ரயிலில் 5 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், ரயிலில் பணம் கொண்டு வரப்படும் தகவலை சொன்னது யார் என பிடிபட்ட கொள்ளையர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் ரயிலில் 5 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - பிடிபட்ட கொள்ளையர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
x
ஓடும் ரயிலில் 5 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், ரயிலில் பணம் கொண்டு வரப்படும் தகவலை சொன்னது யார் என பிடிபட்ட கொள்ளையர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டில், சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட 5 கோடியே 78 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ஓடும் ரயிலின் மேற்கூரையை துளையிட்டு நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தில் துப்பு கிடைக்காமல், சிபிசிஐடி போலீஸ் திணறி வந்த நிலையில், தினேஷ், ரோகன் என்ற இரு வடமாநிலக் கொள்ளையர்கள், கடந்த 12ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர். 

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும்,  மொகர் சிங், காளியா, மகேஷ், பில்த்தியா, ருசி ஆகிய  ஐந்து பேரும், வேறு வழக்கு தொடர்பாக மத்திய பிரதேச சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் சென்னை அழைத்து வரப்பட்டனர்.  5 பேரையும், 14 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க, சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரயிலில் பணம் கொண்டுவரப்படும் தகவலை கொள்ளை கும்பலுக்கு தெரிவித்து ரயில்வே ஊழியர்களா? அல்லது வேறு ஏதேனும் அதிகாரிகளா  என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்