நாட்டின் ஒற்றுமைக்கு இளைஞர்கள் பாடுபட வேண்டும் - நிர்மலா சீதாராமன்

சென்னை தீவுத்திடலில் ஒற்றுமைக்கான தொடர் ஓட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்து, அதில் பங்கேற்றார்.
நாட்டின் ஒற்றுமைக்கு இளைஞர்கள் பாடுபட வேண்டும் - நிர்மலா சீதாராமன்
x
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, சென்னை தீவுத்திடலில் ஒற்றுமைக்கான தொடர் ஓட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்து, அதில் பங்கேற்றார். சென்னையில் அதிகாலையில் பெய்த மழையை பொருட்படுத்தாமல் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் அதில் கலந்து கொண்டனர். தீவுத்திடலில் தொடங்கிய தொடர் ஓட்டம் கலங்கரை விளக்கத்தில் நிறைவு பெற்றது. பின்னர் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் ஒற்றுமைக்காக இளைஞர்கள்  பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்