தரமற்ற பொருள்கள் விற்பனை - உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் இனிப்பு மற்றும் கார பலகார வகைகள் தரமானதாக இல்லையென தொடர் புகார் வந்தது.
தரமற்ற பொருள்கள் விற்பனை - உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
x
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் இனிப்பு மற்றும் கார பலகார வகைகள் தரமானதாக இல்லையென தொடர் புகார் வந்தது. அதன்பேரில்  காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் குன்றத்தூர், திருமுடிவாக்கம், பம்மல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுகாதாரமற்ற முறையில் தயார் செய்திருந்த 500 கிலோ பலகார வகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இனிப்பு வகைகள் பம்மல் குப்பை கிடங்கில் அழிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்