நீண்ட போராட்டத்திற்குப் பின் செவிலியர் படிப்பில் சேர்ந்த இந்தியாவின் முதல் திருநங்கை

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவருக்கு நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு செவிலியர் படிப்பில் இடம் கிடைத்துள்ளது. இதன்மூலம், இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
நீண்ட போராட்டத்திற்குப் பின் செவிலியர் படிப்பில் சேர்ந்த இந்தியாவின் முதல் திருநங்கை
x
வேலூர் மாவட்டம் புளியங்கன்னு பகுதியை சேர்ந்த திருநங்கை தமிழ்ச்செல்வி நர்சிங் படிக்க விரும்பினார். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் செவிலியர் படிப்பிற்காக விண்ணப்பித்தார். ஆனால் திருநங்கை என்பதால் அவரது விண்ணப்பப் படிவம் 2 ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், இவரது வழக்கினை தாமாக முன்வந்து விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்ச் செல்வியை நர்சிங் படிப்பில் சேர்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து அவருக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவக்க்கல்லூரியில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, படிப்பில் சேர்ந்தார்.



Next Story

மேலும் செய்திகள்