எஸ்.பி.ஐ ஏ.டி.எம் சேவை : பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரமாக குறைப்பு

கிளாசிக் மற்றும் மேஸ்ட்ரோ வகை ஏடிஎம் கார்டுகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட இருப்பதாக எஸ்.பி.ஐ கடந்த மாதம் அறிவித்திருந்தது.
எஸ்.பி.ஐ ஏ.டி.எம் சேவை : பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரமாக குறைப்பு
x
இந்த உத்தரவு நாளை புதன்கிழமை முதல் முதல் நடைமுறைக்கு வருகிறது. மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை, ஏடிஎம்களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கும் வகையிலும், டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ விளக்கம் அளித்துள்ளது. ஸ்டேட் வங்கி, அதிக வாடிக்கையாளர்களை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்