பசும்பொன் நினைவிடத்தில் அதிமுக பேனர்கள் கிழிப்பு

கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் TTV தினகரன் மலர் அஞ்சலி செலுத்தினார்.
பசும்பொன் நினைவிடத்தில் அதிமுக பேனர்கள் கிழிப்பு
x
முன்னதாக அஞ்சலி செலுத்த வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இருவரையும் வரவேற்று, வாழ்த்தி அதிமுக நிர்வாகிகள், ஏராளமான பேனர்கள் மற்றும் பதாகைகளை வைத்திருந்தனர். டி.டி.வி. தினகரன் வந்தபோது, அங்கு கூடிய அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தொண்டர்கள் அதிமுகவினர் வைத்திருந்த அனைத்து பதாதைகளையும்  கிழித்து எறிந்தனர். இதனால் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிட பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்