தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் 20,500 சிறப்பு பேருந்துகள்

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
தீபாவளியையொட்டி தமிழகம் முழுவதும் 20,500 சிறப்பு பேருந்துகள்
x
வரும் 6ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 3ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து 11 ஆயிரத்து 367 பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களில் இருந்து 9 ஆயிரத்து 200 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. அந்த பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்கள் நாளை திறக்கப்பட உள்ளன. 

சென்னை கோயம்பேட்டில் உள்ள எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் 30 மையங்கள் திறக்கப்படுகின்றன. முன்பதிவு மையங்களை  அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து, முன்பதிவு தொடங்கும் என போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்