தீபாவளிக்கு தீப ஒளிவீச தயாராகும் "அகல் விளக்குகள்"

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி திருச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது... இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...
தீபாவளிக்கு தீப ஒளிவீச தயாராகும் அகல்  விளக்குகள்
x
தீப ஒளியேற்றும் பண்டிகையான தீபாவளியில் வீடுகளில் நன்மைகள் நிறைய விளக்கேற்றுவது வழக்கம்.. இதற்காக பண்டிகையை கொண்டாடும் பலரும் புதிதாக விளக்குகளை வாங்க ஆர்வம் காட்டுவர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் களிமண்ணால் ஆன அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருவானைக்காவல் அருகே உள்ள மேல கொண்டயம் பேட்டை மற்றும் கீழ கொண்டயம் பேட்டை பகுதிகளில் இந்த அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 

என்னதான் வெள்ளியிலும், பித்தளையிலும் விளக்குகள் வைத்திருந்தாலும் அகல் விளக்குகளில் எண்ணெய் ஊற்றி திரியேற்றி வீடு நிறைய வெளிச்சத்தை பரவ விட மக்கள் விரும்புவார்கள் என்பதால் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையை தொடர்ந்து கார்த்திகையும் வருவதால் இங்கு அதற்கேற்றார் போல் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு ஆயிரம் விளக்குகள் வரை செய்து வருவதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் கோயில்களில் விளக்குகள் ஏற்றக் கூடாது என்ற உத்தரவால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆயிரம் விளக்குகள் விற்பனை செய்தாலும் குறைந்த அளவே பணம் கிடைப்பதாகவும், கோயில்களுக்கு விற்கப்பட்டு வந்த விளக்குகள் தற்போது தேக்கமடைந்து இருப்பதாகவும் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். விளக்குகளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற அரசு முன்வர வேண்டும் என்பதே இங்கு கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.. 

Next Story

மேலும் செய்திகள்